Sunday, December 30, 2012

இயற்கை உணவு குறித்த பொன்மொழிகள்


(1) வைகறையில் துயில் எழு. (அதிகாலையில் எழ வேண்டும்).
(2) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

(3) உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.

(4) நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை 
சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும்)
(5)
உணவும் மருந்தும் ஒன்றே.
(6)
அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.
(7)
கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலை படைத்தான். 
(8)
படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்.
(9)
பசிக்காக சாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே
(10)
சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.
(11)
சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும்.& ஜப்பானிய பொன்மொழி
(12)
சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்.&ஸ்பெயின் பொன்மொழி
(13) 5
மணிக்கு எழு 9 மணிக்கு உண் (காலை)
5
மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை)
(14)
வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும்&ஜெர்மன் பழமொழி.
(15)
பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.
(16)
சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.
Any source

No comments:

Post a Comment